பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் ராணுவம், எல்லைத் தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தது. இதற்கிடையே பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விழுந்த வெடிகுண்டை, செயலிழக்க வைத்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.