உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் - சாப்பாட்டுக்கே வழியில்லை!
Oct 19, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 21 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா அழித்துள்ளது.  அதனால், இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அரசு போருக்குத் தயாராகி வரும் நிலையில் அந்நாட்டின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2023ம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தைச் சமாளிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ள பாகிஸ்தான், ஏற்கெனவே சர்வதேச ஆணையத்திடம் கடன் கேட்டுக் கையேந்தியது.

அதற்காக, அரசுக்குச் சொந்தமான 6 அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், 1.5 லட்சம் அரசுப் பணிகளை உடனடியாக நீக்கவும், 2 அமைச்சகங்களை ஒன்றாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வரும் ஜூலை மாதத்துக்குள், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உட்பட  நான்கு அரசு வங்கிகளை விற்கவும் முடிவெடுத்தது.

கூடுதலாக, நாட்டின் வருமானத்தை உயர்த்த பாகிஸ்தான் அரசு, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியது. 2023ம் ஆண்டு, வருமான வரி வலையில் சுமார் 3,00,000 பேர் புதிதாக விழுந்தார்கள். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு,  8,00,000 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய வரி செலுத்துபவர்களாக ஆக்கப்பட்டார்கள். இதன் மூலம் பாகிஸ்தானின்  மொத்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக அதிகரித்துள்ளது.

2024 ஜூலை முதல் ஏப்ரல் 2025 ஏப்ரல் வரையிலான ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானில் சம்பளம் வாங்கும் சராசரி மக்கள், ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 10 ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளனர்.அதே நேரம், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் 60 பைசா மட்டுமே வரி செலுத்தியுள்ளனர்.

அதாவது, பாகிஸ்தானில் அரசு வசூலிக்கும் மொத்த வருமான வரியில் 10 சதவீதம், சம்பளம் வாங்கும் சாமானியர்களால்  செலுத்தப்படுகிறது. இது கடுமையான பாரபட்சமான வரி முறையாகும். கடந்த ஆண்டு,  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  4.2 டிரில்லியன் டாலராகும். ஆனால்,   பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  374 பில்லியன் டாலராகும். அதேபோல்,கடந்த ஆண்டு, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,711 டாலராகவும், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,581 டாலராகவும் இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தான் GDP  2.6 சதவீதத்துக்கும் குறைவாகவே வளரும் என்று சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானின் GDP, இந்திய ரூபாய் மதிப்பில்  31.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் ஒரு மாநிலத்தின் GDP யை விட  மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் GDP 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த  GDPயை விட 11 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். மேலும், தமிழ்நாட்டின் GDP கிட்டத்தட்ட 30 லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நிதியாண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை ஒன்றாம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 17.5 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான பட்ஜெட்டில், இராணுவத்துக்காக ஒதுக்கீட்டை 18 சதவீதம் அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிக்கு, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் அக்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் வருமானம் கடனுக்குத் திரும்பிச் செலுத்தவே போதுமானதாக இல்லை. இதில்,  முழுமையான போரில், பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியுமா ? என்றால் இல்லை என்றுதான் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: திவாலாகும் பாகிஸ்தான் பொருளாதாரம்pakistanபஹல்காம் தாக்குதல்Pakistan sets an example: Economy in bankruptcy - no way to even eat
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Next Post

கிரிக்கெட் உலகின் THE GOAT விராட் கோலி!

Related News

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies