இணையத்தில் OPERATION SINDOOR - நடந்தது எப்படி?
Sep 10, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

Murugesan M by Murugesan M
May 9, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. OPERATION SINDOOR-ன் சிறப்பம்சமே பாகிஸ்தான் வான்வெளிக்குள் செல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதுதான். அது எப்படி என்பது பற்றி வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் உலாவுகிறது.

அதில், இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து 100 முதல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நின்று ரபேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் இந்திய எல்லைக்குள்ளேயே நின்ற ரபேல் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. SCALP ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இடங்களிலும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். ரேடாரில் சிக்காமல் கட்டடங்களையும் பதுங்கு குழிகளையும் முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.

அதேபோல் ஹரியானாவின் அம்பாலா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரபேல் விமானங்கள் KOTLI, BHIMBER ஆகிய இடங்களில் HAMMER குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

HAMMER குண்டுகள் விரைவாகச் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. JAMMER-களால் இவற்றைத் தடுக்க முடியாது. குறைந்த உயரத்திலிருந்தே வீசப்படுவதால் இடைமறிப்பதும் கடினம்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் BAREILLY-ல் இருந்து புறப்பட்ட சுகோய் 30 MKI விமானங்கள் பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 400 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதால் பிராமோஸை தடுத்து நிறுத்த எதிரிகளுக்கு அதிக நேரம் இருக்காது.

ஏவுகணைகள் மட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india pakistan war\OPERATION SINDOOR on the Internet - How did it happen?
Share
Tweet
SendShare
Previous Post

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

Next Post

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies