தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்ததால் போர் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ், அவசரக்கால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.