இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ‘நூர் கான்’ விமான தளம் பலத்த சேதமடைந்தது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது இந்தியா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ராவல்பிண்டியில் ராணுவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நூர் கான் விமான தளம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்த விமான தளம் பலத்த சேதமடைந்தது. மேலம், பாகிஸ்தானில் உள்ள மூரிட் மற்றும் ஷார்கோட் விமான தளங்களையும் இந்திய ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானின் வான்வெளி எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.