இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் உயர்மட்ட NCA கூட்டத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் 3 விமானப்படைத் தளங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், NCA அமைப்பின் உயர்மட்ட கூட்டத்திற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாகப் பாகிஸ்தானின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த NCA அமைப்புடன், பாகிஸ்தான் பிரதமர் உயர்மட்ட கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது எந்நேரத்திலும் போர் அறிவிக்கப்படலாம் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடங்கும் முன் தங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகப் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.