பாகிஸ்தானின் சியால்கோட் அடுத்த லூனி பகுதியில் உள்ள அந்நாட்டு ஏவுதளத்தை இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை தாக்கி அழித்தது.
அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதிக்கு நேர் எதிரே இருந்த பாகிஸ்தானின் ஏவுதளம், எல்லை பாதுகாப்புப் படையினரால், முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டது.
இதேபோல குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் நலியா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
நடுவானில் பாகிஸ்தானின் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், கட்ச் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.