இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாகவே ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன என்பது டிரம்புக்கு தெரியும் என்றும், இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டும் என அவர் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இரு நாடுகளின் தலைவர்களுடனும், டிரம்ப் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.