1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போருடன் தற்போதைய சூழலை ஒப்பிட முடியாது எனக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் உண்மை என்னவென்றால், 1971 ஆம் ஆண்டின் சூழ்நிலைகளை தற்போது ஒப்பிட முடியாது என எம்பி சசிதரூர் தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டின் சூழ்நிலைகள் 2025 ஆம் ஆண்டின் சூழ்நிலைகள் அல்ல என்றும் அதில் வேறுபாடுகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
தற்போது இரு நாட்டுக்கிடையே நடந்த போர், நாம் தொடர விரும்பியது அல்ல என்றும் பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினோம், அந்தப் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என நம்புகிறேன் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறினார்.