குன்றக்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.
குன்றக்குடி அடுத்த கொரட்டி சிந்தாமணி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில், சிவகங்கை, மதுரை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 350-க்கு மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. சீறி பாய்ந்து சென்ற காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிக் போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். காளைகள் முட்டியதில் 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.