காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவ தளங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளைத் திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.