திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.