திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. விடுமுறை தினமான இன்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிறு விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.