ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நமது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முற்பட்டது.
ஆனால், பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் செயலிழக்க வைக்கப்பட்டது. எந்த ஏவுகணையும் இலக்கை எட்டவில்லை.
S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக்-8 ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் DRDOவின் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
மேலும், இஸ்ரேலின் ஹரோப் ட்ரோன்கள், SCALP மற்றும் HAMMER ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் தாக்குதலை மேலும் பலப்படுத்தியது.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, எதிரிகளின் ஆயுதங்கள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறிந்து தடுத்து அழிக்கும் அளவிற்கு வான் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.