சீமராஜா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க ஆறு மாத காலம் கடினமாக உழைத்ததாகவும், அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள்தான் இடம்பெற்றது என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய நடிகர் சூரி, சிக்ஸ் பேக் காட்சி அதிக நேரம் இடம்பெறாதது சிறிது ஏமாற்றமாக இருந்தாலும், அதுதான் தன்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது எனவும் கூறினார்.