டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மீண்டும் முப்படை தளபதிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.