இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.
இதில் ஐசி-814 விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட மசூத் அசார் உட்பட 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய தீவிரவாத அமைப்புகளின் தளபதிகள் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்டதாகவும், இதனால் பாகிஸ்தானின் ராணுவ – பயங்கரவாத உறவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்ட “ஏ” பிரிவு பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் ராணுவத்தினர் கலந்துகொண்டது அவர்களிடையே இருந்த மறைமுக உறவை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்தது.