உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் தொடங்கியுள்ள 20வது கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
ரோஜா கண்காட்சியை முன்னிட்டு கருப்பு, பச்சை, ஊதா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும், கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்டு மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பங்களைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.