சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அதில், இப்படத்திற்கு ‘டியூட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டிராகன் திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.