இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் மிருல்லா சலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் வீழக்கூடிய நிலையில் உள்ளதாகவும், போர் நிறுத்தம் பாகிஸ்தானைக் காப்பாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எனவும் பதிவிட்டுள்ளார்.