Operation Sindoor என்ற பெயருக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது OPERATION SINDOOR எனும் பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இந்த தலைப்பில் படத்தைத் தயாரிக்க 30க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு கவுன்சிலில் பதிவு செய்துள்ளன.
ஆனால் முதன் முதலில் தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் தான் இந்த தலைப்பைப் பதிவு செய்துள்ளார்.