பாகிஸ்தானை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய ராணுவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த மனிதத் தன்மையற்ற கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது என தெரிவித்துள்ளார்.
நமது பொதுமக்களையும், புனித தலங்களையும், ராணுவ கேந்திரங்களையும் குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததோடு, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை குறி வைத்து நொறுக்கிய நமது இந்திய ராணுவத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.