பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், அதிகாலை வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தொடர்ந்து பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.