டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை எனவும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது டெஸ்ட் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் நிச்சயம் 60க்கு மேல் சராசரியான ரன்களை விராட் கோலி எடுப்பார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.