சென்னை பூந்தமல்லி அருகே ராட்சத இரும்பு பேனர் கம்பம் உடைந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னீர் குப்பம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ராட்சத பேனரின் இரும்பு கம்பம் உடைந்து அந்த பகுதியில் உள்ள கடைகளின் மேல் விழுந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடைகளில் யாரும் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னீர்குப்பம் – பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் விதிகளை மீறி ராட்சத பேனர்களுக்காக இரும்பு கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், காற்றின் வேகம் காரணமாக பேனர்கள் கிழிந்து சாலைகளில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.