விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணை அமைந்துள்ளது. விடுமுறை தினத்தையொட்டியும், வெயிலின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்கவும் பொதுமக்கள் அணையில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும், பரிசல் பயணம் மேற்கொண்டும், பூங்காவில் நேரம் செலவிட்டும் பொழுதை உற்சாகமாகக் கழித்தனர்.