சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த லாரி விபத்தில் 10 பெண்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பனார்சி கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, மினி லாரியில் ஏறி வீடு திரும்பியுள்ளனர்.
ராய்பூர் – பலோதாபஜார் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 10 பெண்கள், இரு சிறுமிகள், சிறுவன் மற்றும் 6 மாத குழந்தை என 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.