ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சலபதி, ஜெயச்சந்திரா மற்றும் நாகேந்திரா ஆகிய 3 உடன் பிறந்த சகோதரர்கள், நண்பரான வேணுகோபாலுடன் அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க காரில் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினர்.
பெத்தயலம்பள்ளி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, வளைவில் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், சகோதரர்கள் மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கதிரி போலீசார், படுகாயமடைந்த வேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.