சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.
நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இவர், இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 ஆயிரத்து 230 ரன்கள் அடித்துள்ளார். மேலும், 30 சதங்கள் மற்றும் 7 இரட்டை சதங்களையும் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இந்த டெஸ்ட் கிரிக்கெட்டானது, பல சோதனைகளையும், பாடங்களையும் கற்றுக் கொடுத்து தனது வாழ்க்கைக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கடினமான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.