கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கலபுர்கி மாவட்டத்தில் உள்ள வாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வரும் கர்நாடகா விரைவு ரயிலில், வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
அதனடிப்படையில் ரயில்வே போலீசார் விரைவு ரயிலை வாடி சந்திப்பில் நிறுத்தி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மேலும், அதே ரயிலில் பயணித்த தீப் சிங் என்ற இளைஞர் தனது தந்தையைப் பழிவாங்க, அவரது செல்போனில் இருந்து போலி அழைப்பு விடுத்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில்வே போலீசார் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.