மகாராஷ்டிர மாநிலம், தானேவில் உள்ள ஒரு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பிவந்தி பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.