வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் வெசாக் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெசாக் தினத்தையொட்டி இலங்கை முழுவதும் 388 சிறைக் கைதிகள் அதிபரின் பொது மன்னிப்பின்கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்படி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உட்பட 20 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.