கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே விண்ணேற்றிப்பறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி முழுநிலவு திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
விண்ணத்திப்பாறை பகுதிக்கு இரு மாநிலம் உரிமை கொண்டாடுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், கண்ணகி கோயில் பிரச்சனை தொடர்பாக இருமாநில அரசும் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.