அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் கடந்த 2020 – 21ம் நிதியாண்டு முதல், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தமிழகம் தான் அதிக மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் தமிழகம் 1.01 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்ஜெட் குறையை சமாளிக்க மார்ச் மாதத்தில் தான் அனைத்து மாநிலங்களும் அதிக கடன் பெறும் என்பதால், இந்த நிதியாண்டின் முடிவில் தமிழகத்தின் கடன் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே 15வது நிதி ஆணைய நிபந்தனைகளின் படி ஒரு மாநிலத்தின் கடன் தொகைக்கும், உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான விகிதம் 28.70 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ரிசர்வ் வங்கியின் தரவுகள், தமிழகத்தின் கடந்த நிதியாண்டின் விகிதத்தை ஒப்பிட்டுள்ளது,
அதில் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் 26.43 சதவீதமாகவும், நடப்பு ஆண்டில் 26.07 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.