நாடு முழுவதும் 44 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றன.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களில் 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.