‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கின்றன.
காதலுக்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்வது போன்று கதைக்களம் அமைந்திருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் தீமா தீமா பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 18-ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.