பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதைக் காட்டுகிறது என எல்.முருகன் கூறினார்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை வரவேற்கிறேன் என தெரிவித்தவர், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மிகப்பெரிய அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
திமுக மிகப்பெரிய அளவில் விலைவாசி உயர்வை மக்கள் மத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் என எல். முருகன் குறிப்பிட்டார்.