இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை எனக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை எனவும், பிற நாடுகளுடன் பேசுவதை மத்தியஸ்தம் எனக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.