பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நமக்கு இணையானவை அல்ல எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாகப் பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாகப் பெருமிதம் தெரிவித்த அவர், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு நமக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் நமக்கு இணையானவை அல்ல எனத் தெரிவித்த பிரதமர் மோடி ஒட்டுமொத்த தேசமும் முப்படைகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளதாகக் கூறினார்.