2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சந்திரயான்-4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
2040-ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.