பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, பொள்ளாச்சியைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததோடு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிவடைந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என  நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதிகபட்சமாக 2வது குற்றவாளி திருநாவுக்கரசர் மற்றும் 5வது குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 3வது குற்றவாளி சதீஷ் மற்றும் 7வது குற்றவாளி ஹெரன்பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பிற குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கியும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாகத் தண்டனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: DMKபொள்ளாச்சி பாலியல் வழக்குPollachi sex case: 9 accused sentenced to life imprisonment till deathகோவை மகிளா நீதிமன்றம்
Share
Tweet
SendShare
Previous Post

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

Next Post

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies