எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, கூடுதலாக எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கி உள்ளது. ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என அழைக்கப்படுகிறது.
இந்த வாகனம் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கவும், 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கவும் உதவுகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு
ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.