இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சிறுவனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய ராணுவத்திற்கு உதவ, எட்டு வயது சிறுவன் செல்வன். தன்விஷ் தனது பத்து மாத உண்டியல் சேமிப்புப் பணத்தைக் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள சம்பவம் மிகவும் நெகிழ்ச்சிகரமானது.
இதே போல சில நாட்களுக்கு முன், ஆறு வயது சிறுமி செல்வி. தாருணிகா தனது சேமிப்புப் பணத்தை இராணுவத்திற்கு வழங்கிய மற்றொரு மகிழ்ச்சியான தருணமும் நிகழ்ந்தது. சிறுமியின் சேமிப்புப் பணத்தை, நமது பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் @Kcmb_srinivasan அவர்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஆன்லைன் மூலமாக செலுத்தினார்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் நம் இராணுவ வீரர்கள் நமது தாய்மண்ணைக் காத்து வரும் வேளையில், இந்த சின்னஞ்சிறு வயதில் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய முன்வந்திருக்கும் செல்வன். தன்விஷ் மற்றும் செல்வி. தாருணிகாவிற்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகள்!
மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த அவர்களது பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு சிறுவர்களின் பெருமைக்குரிய செயல்கள் தமிழகம் தேசப்பற்று மிகுந்த மாநிலம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.