பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு - பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!
May 14, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

Web Desk by Web Desk
May 14, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் ‘பலூச் விடுதலை படையினர், தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தானின் பல நிலைகள் மீது தொடர் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை அங்கீகரிக்கும்படியும் இந்தியா மற்றும் ஐ.நா-வுக்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பலுச்சிஸ்தானை தனி நாடாக பலூச் விடுதலை படையினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை பறக்கவிட்டு தனி நாடு அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

பலுசிஸ்தான் வான்பகுதி, கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பலுச் அல்லாதவர்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், நாட்டின் கரன்சி நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை அச்சடிக்க நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், பலுசிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘குடியரசு பலுசிஸ்தான்’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானுடனான சண்டையில் பலூச் விடுதலை படையினர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: UNBaloch Liberation ArmyBalochistan as a separate countryPakistanis to leave country
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Next Post

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Related News

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

அணு ஆயுத கிடங்கில் கதிர் வீச்சு கசிவா என்பது குறித்து பாகிஸ்தான் தான் விளக்கமளிக்க வேண்டும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

வைகாசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

மருவத்துவனை லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் – ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பெருந்துறை அருகே செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

கோவையில் போதை ஊசி செலுத்தி இளைஞர் கொலை – 4 பேர் கைது!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies