அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளுக்கான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் அனைத்து விளம்பரங்களையும் தங்கள் தளத்தில் இருந்து அகற்றியுள்ளதாக MAKE MY TRIP நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்தபோது அஜர்பைஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக இந்திய எல்லை மாநிலங்களில் தாக்குதல் நடத்த துருக்கில் இருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய ராணுவம் உறுதி செய்தது.
இந்நிலையில், அந்த இரு நாடுகளுக்குமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் அனைத்து விளம்பரங்களையும் தங்கள் தளத்தில் இருந்து அகற்றியுள்ளதாக MAKE MY TRIP நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
மேலும், அந்த இரு நாடுகளுக்குமான முன்பதிவுகள் 60 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரத்து செய்தல் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய பயணிகள் வெளிப்படுத்தியுள்ள தேச பக்தியை தாங்கள் ஆதரிப்பதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.