உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையை ஹெச்.சி.எல் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து அமைப்பதாக தெரிவித்த அவர், மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் என கூறினார்.
மேலும் இந்த தொழிற்சாலை 2027 ஆம் ஆண்டு செயல்பட தொடங்கும் என கூறிய அஸ்வினி வைஷ்ணவ்,இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 3 புள்ளி 6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.