சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன் ஹீட் வெயில் பதிவானது. திருச்சி, கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன் ஹீட்டும், பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன் ஹீட்டும், மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவானது இதேபோல் சேலத்தில் 102 டிகிரி ஃபாரன் ஹீட்டும், சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் சுட்டெரித்தது.