இந்தியாவுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என, பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்று 2018ல் ஐநாவில் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததாக டேவிட் வான்ஸ் கூறினார்.
மேற்கத்திய ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா பெற்ற வெளிப்படையான வெற்றியை அவைகள் புறக்கணித்துவிட்டன என தெரிவித்தார்.
மேலும், பிபிசி செய்தி நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும், அது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது எனவும் டேவிட் வான்ஸ் கூறியுள்ளார்.