நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கைத் துணை கெனிஷா என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கண்ணியத்தைக் கேள்விக்குறியாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னை கணவராக இல்லாமல் தங்க முட்டையிடும் வாத்தாக மட்டுமே ஆர்த்தி கருதியதாகத் தெரிவித்துள்ள அவர், குழந்தைகளைப் பயன்படுத்தி, நிதி ஆதாயம் பெற முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உடமைகளை அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியபோது கூட கெனிஷா தனது ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ரவி மோகன், முன்னாள் மனைவி ஆர்த்தியை விட்டு விலகுவதாக முடிவு செய்திருந்தாலும் மகன்களை விட்டு விலகப் போவது இல்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளார்
எனது குழந்தைகளைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சட்டத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.