இந்திய ராணுவத்தால் நிம்மதியாகத் தூங்குகிறோம் என்று ரஷ்ய பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் குறித்து இந்தியாவில் வசிக்கும் ரஷ்ய பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இருதரப்பு மோதல் ஏற்பட்டபோது தனது குடும்பத்தினர் தன்னை வீட்டிற்குத் திரும்பி வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் நிம்மதியாகத் தூங்கியதாகவும், இந்தியாவைத் தனது வீடு என்றும் குறிப்பிட்டுள்ளார். .